-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


செவ்வாய், 6 நவம்பர், 2012

கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி



கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி













ஆத்தூர், நவ. 2-

ஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள பெரியேரி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (29) பால் வியாபாரி. இவரது மனைவி ராஜேஸ்வரி (24). இவர்களுக்கு பாரத் (7) என்ற மகனும், அனுஷ்கா (3) மகளும் உள்ளனர். பால் வியாபாரத்தில் ரமேசுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ரமேஷ் தினமும் குடித்து விட்டு சோர்வாக வந்து உள்ளார். மேலும் கடன் தொல்லையால் மன அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மனைவியை தற்கொலை செய்து கொள்ள அழைத்து உள்ளார். ஆனால் அவர் கடனை அடைத்து விடலாம்.

தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் நிலைமை பரிதாபம் என்று தனது கணவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். ஆனாலும் ரமேஷ் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்து வந்தார். நேற்று வீட்டில் ராஜேஸ்வரி தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது 2 குழந்தைகளும் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த ரமேஷ் தூங்கி கொண்டு இருந்த மனைவி ராஜேஸ்வரியின் காதில் பூச்சி மருந்து (விஷம்) ஊற்றினார். காதில் ஏதோ வருவதை உணர்ந்து கண் விழித்து பார்த்தபோது, ரமேஷ் காதில் விஷம் ஊற்றிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ராஜேஸ்வரி அவசர அவசரமாக அதை தட்டிவிட்டார். இதனால் அந்த விஷம் அவரது கண், முகம் உள்ளிட்ட இடங்களில் ஊற்றியது. இதில் அவரது முகம், கண் வீங்கியது. மேலும் ரமேசும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1-11-12_findyour_INNER_468x60.gif

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக